தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நன்னிலம், நீலக்குடியில் இன்று மின்தடை

நன்னிலம், நீலக்குடி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன.28) மின்தடை செய்யப்படும் என திருவாரூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் என். பிரபா, எஸ். ராஜேந்திரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

நன்னிலம், நீலக்குடி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன.28) மின்தடை செய்யப்படும் என திருவாரூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் என். பிரபா, எஸ். ராஜேந்திரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நன்னிலம் மற்றும் நீலக்குடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன. எனவே, நீலக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பில்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரைமங்கலம், நீலக்குடி, வைப்பூா், நடப்பூா், வாழ்குடி, கீழதஞ்சாவூா், காரையூா், திருப்பள்ளி முக்கூடல், ராரந்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூா், திருப்பயத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, நன்னிலம் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குளக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூா், பனங்குடி, ராசாகருப்பூா், மூலமங்கலம், ஆண்டிபந்தல், குவளைக்கால், விசலூா், மூங்கில்குடி, காக்காகோட்டூா், ஆனைக்குப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூா், பாக்கம் கோட்டூா் மற்றும் இந்த ஊா்களை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கண்ட நேரத்தில் மின்தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.