நீடாமங்கலம் பகுதியில் காமராஜர் பிறந்தநாள் விழா

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா நீடாமங்கலம் பகுதியில் கொண்டாடப்பட்டது.
நீடாமங்கலம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா.
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா.
Updated on
2 min read

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா நீடாமங்கலம் பகுதியில் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோ.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துறை முன்னாள் அலுவலர் ஆர்.கே.ராஜேந்திரன், பொறியாளர்கள் வெங்கடேஷ் குமார், விஜயபாஸ்கர், சத்துணவு மேலாளர் சோமசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக நீடாமங்கலம் ஒன்றிய அனைத்து வகை தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ந. சம்பத், சு.முத்தமிழன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொறுப்பு )சத்தியா கலந்துகொண்டு கல்வி வள்ளல் காமராஜரின் அரும்பணிகளையும், கல்வி வளர்ச்சியில் அவர் ஆற்றிய பங்கினையும் எடுத்துக் கூறினர். 

விழாவில் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, வில்லுப்பாட்டு மூலம் காமராஜருக்கு புகழாரம் சூட்டினர். மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கினர்.  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். முன்னதாக தலைமை யாசிரியர் சி.உமா வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில்- நீடாமங்கலத்தில் நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர்  120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

நீடாமங்கலம் உதவும் மனங்கள் அமைப்பு சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழா.

அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. விழாவில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்  நீலன். அசோகன், வட்டார தலைவர் மருதப்பன், நகர தலைவர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் பத்மநாபன், சிறுபான்மை பிரிவு தலைவர் ரஹ்மத்துல்லா, நகர பொருளாளர் ராஜேந்திரன் , பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, முகமது உசேன், கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ராஜபாண்டியன் மற்றும் பலர்  கலந்து கொண்டனர். 

நீடாமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழா.

உதவும் மனங்கள் அமைப்பு - உதவும் மனங்கள் அமைப்பு சார்பில் நடந்த காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவிற்கு நிறுவனர் எஸ்.எஸ்.குமார் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் பாபு மனோகரன் முன்னிலை வகித்தார்.  எஸ்.சுரேஷ் வரவேற்றார். காமராஜர் உருவபடத்திற்கு பணி ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் பூ. நேரு மாலை அணிவித்தார். விழாவில் வர்த்தகர் சங்க தலைவர் பி.ஜி.ஆர்.ராஜாராமன், அமைப்புசாரா நல இயக்க நிர்வாகி வேணு.அண்ணாதுரை, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பி.திருப்பதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். சு.சண்முகம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com