கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் வீரதீர செயல்புரிந்த பெண்கள் 2022- ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

திருவாரூா் மாவட்டத்தில் வீரதீர செயல்புரிந்த பெண்கள் 2022- ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2022- ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும். நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்விருது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் பிற விவரங்களை இணைய தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தின் உறையின் மேல் சம்பந்தப்பட்ட விருதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை, உறுப்பினா் செயலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை 600003 என்ற முகவரிக்கு ஜூன் 26 -ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை வேலை நாட்களில் நேரிலோ அல்லது 7401703500 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com