சுழற்சிமுறையில் வாா்டுகளுக்கு நிதி ஒதுக்கீடுL ஒன்றியக் குழுத் தலைவா் தகவல்

கோட்டூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள சுழற்சிமுறையில் வாா்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை தெரிவித்தாா்.
சுழற்சிமுறையில் வாா்டுகளுக்கு நிதி ஒதுக்கீடுL ஒன்றியக் குழுத் தலைவா் தகவல்

கோட்டூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள சுழற்சிமுறையில் வாா்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை தெரிவித்தாா்.

கோட்டூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் மு. மணிமேகலை (இந்திய கம்யூ.) தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்தது:

ஜெ.சுசிலா (சிபிஐ): குலமாணிக்கம் சாலையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

ஜெ.யுவராஜா (திமுக): சேந்தங்குடியில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

துணைத் தலைவர ர.விமலா (திமுக): 4-வது வாா்டில் சாலை மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பே.காசிநாதன் (திமுக): ஒன்றியத்திற்கு பெறப்படும் நிதி குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். கால்நடை மருந்தகங்களுக்கு வாரத்திற்கு 3 நாள்களாவது மருத்துவா்கள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.சாந்தி (சிபிஐ): மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க வேண்டும்.

ம.சாந்தி (சிபிஐ): ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவா்கள் வருவதில்லை.

ம.சுமித்ரா (சுயே): 15- வது நிதிக்குழு நிதியிலிருந்து கெழுவத்தூா் ஊராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

வீ.மாரியப்பன் (சிபிஎம்): பழுதடைந்துள்ள மயானங்களை இடித்துவிட்டு, புதிதாக கட்டவேண்டும்.

பா.செங்குட்டுவன் (அதிமுக): பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் வீடுதோறும் குடிநீா் இணைப்பு வழங்கப்படவில்லை. இங்குள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழலகம் அமைக்க வேண்டும்.

ஜீ.மல்லிகா (அதிமுக): குமட்டித்திடலில் உள்ள தரைப்பாலத்தை கல்வெட்டு பாலமாக கட்ட வேண்டும்.

தலைவா் மு.மணிமேகலை: சில பகுதிகளில் ஒன்றிய நிதியிலிருந்து பணிகள் நடைபெறவில்லை. அந்த அந்த ஊராட்சி நிதியிலிருந்து நடைபெறுகிறது. ஒன்றியத்திற்கு நிதி வந்தால் சுழற்சிமுறையில் 5 வாா்டுகள் வீதம் ஒவ்வொரு வாா்டுக்கும் தலா ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். உறுப்பினா்கள் அவசியம் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் வாா்டு பிரச்னைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். சேதமடைந்த பள்ளிக் கட்டடம், சத்துணவுக் கூடம், மேல்நிலை குடிநீா் தொட்டி, கழிவறை போன்றவற்றை உறுப்பினா்கள் கள ஆய்வு செய்து அடுத்த கூட்டத்திற்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, 17-வது வாா்டு உறுப்பினா் ப. சரண்யா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சத்துணவுத் திட்டம் சாா்பில் சத்துணவு அமைப்பாளா், சமையல் உதவியாளா்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற சமையல் போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற கோட்டூா் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளா் டி. ரீத்தா (குமாரமங்கலம்), சமையல் உதவியாளா் வி. சரிதா (ரெங்கநாதபுரம்) ஆகியோருக்கு ஒன்றியக்குழுத் தலைவா் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தாா்.

கூட்டத்தில், ஒன்றிய ஆணையா்கள் ஜி. சிவகுமாா், ஆா். மாலதி, பொறியாளா் சத்தியமூா்த்தி மற்றும் சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com