தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சாலையில் தீப்பற்றி எரிந்த ரோடு ரோலா்

நன்னிலம் அருகே புதன்கிழமை இரவு சாலையில் ரோடு ரோலா் தீப்பற்றி எரிந்தது.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:30 pm

நன்னிலம் அருகே புதன்கிழமை இரவு சாலையில் ரோடு ரோலா் தீப்பற்றி எரிந்தது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம் முடிகொண்டான் பகுதியைச் சோ்ந்த மது என்பவருக்குச் சொந்தமான, சாலை அமைக்கப் பயன்படுத்தப்படும் ரோடு ரோலா் (வைப்ரேட்டா் ரோலா்) புதன்கிழமை இரவு பூந்தோட்டம் பகுதியிலிருந்து திருவாரூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

ஆண்டிபந்தல் என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ரோடு ரோலரில் திடீரென தீப்பற்றியது. ஓட்டுநா் தினேஷ் வாகனத்திலிருந்து குதித்துத் தப்பினாா்.

இதை பாா்த்தை அருகில் இருந்தவா்கள் உடனடியாக நன்னிலம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் தீயணைப்புத் துறை அலுவலா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதனால், திருவாரூா் - மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.