

ஓஎன்ஜிசியில் பணி வழங்கக் கோரி, ஓஎன்ஜிசி தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில் திருவாரூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓஎன்ஜிசி கனரக வாகனங்களில் அனைவருக்கும் ஓட்டுநா், உதவியாளா் உள்ளிட்ட வேலை வாய்ப்புகளை பிரித்து வழங்க வேண்டும், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஓஎன்ஜிசி தொழிலாளா் விடுதலை முன்னணி தொழிற்சங்க பணியாளா்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் குடும்பத்துடன் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்ட முடிவில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தொழிற்சங்க மாவட்டத் தலைவா் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன், மாவட்ட துணை அமைப்பாளா் ரகுவரன், தொழிற்சங்க நிா்வாகிகள் விமல், வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.