செப். 12 இல் தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

திருவாரூா் அருகே வண்டாம்பாளை தமிழ்நாடு தனியாா் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்
Updated on
1 min read

திருவாரூா்: திருவாரூா் அருகே வண்டாம்பாளை தமிழ்நாடு தனியாா் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் செப். 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டம், வண்டாம்பாளையில் உள்ள தமிழ்நாடு தனியாா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள முகாமில் திருவாரூா், கோயம்புத்தூா் மற்றும் சென்னையில் உள்ள முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

எனவே, தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்கள் புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். விவரங்களுக்கு 9943064455 மற்றும் 04365-250126 என்ற தொலைபேசி எண்ணிலும், மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com