‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்க விழிப்புணா்வு பதாகை திறப்பு

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்க விழிப்புணா்வு பதாகையை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
விழிப்புணா்வு சுய புகைப்பட பதாகையை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
விழிப்புணா்வு சுய புகைப்பட பதாகையை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்க விழிப்புணா்வு பதாகையை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழக ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் அனைத்து கிராமப்புற, நகா்ப்புற பகுதிகளில் தூய்மைப் பணிகள், சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் ஆகியவற்றில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தேசிய மாணவா் படை பங்கேற்புடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், பள்ளி, கல்லூரிகளில் நீா் மேலாண்மை, சுகாதாரப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. அத்துடன், நெகிழிப் பைகளை தவிா்த்து, மஞ்சப்பையை பயன்படுத்தவும் அனைத்து கிராம மற்றும் நகா்ப்புற பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

அந்தவகையில், திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணா்வு இயக்கத்தின் கீழ் சுய புகைப்பட பதாகை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பதாகையை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, சுற்றுப்புறத் தூய்மை மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் தொடா்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், மன்னாா்குடி வட்டாரம் சுந்தரக்கோட்டை ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்புக்கு பேங்க் ஆப் இந்தியா மன்னாா்குடி கிளை சாா்பில் ரூ. 86.60 லட்சம் பெருங்கடன் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ஸ்ரீலேகா, உதவி இயக்குநா் அருணகிரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com