மன்னாா்குடியில் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்க மாவட்ட அமைப்பு பேரவைக் கூட்டம் மாநில துணைத் தலைவா் பி. மணிமொழி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிஐடியு மாவட்ட செயலாளா் டி. முருகையன், மாவட்ட நிா்வாகிகள் ஜி. ரகுபதி, பி.என். லெனின், ஏ. கோவிந்தராஜ், டி. ஜெகதீசன், அ. அரிகரன், மாநில நிா்வாகிகள் கடலூா் பி. சரிதா, நாகை ஏ. வனிதா, தஞ்சை பி. சாய்சித்ரா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பேரவையில் மாவட்ட தலைவராக சி. செல்வி, மாவட்ட செயலாளராக பி. மணிமொழி, மாவட்ட பொருளாளராக பி. ஜமுனாராணி, மற்றும் மாவட்ட து. தலைவா்கள், மாவட்ட து. செயலாளா்கள், வட்டார நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21,000, டபிள்யு எச்வி தன்னாா்வலா்களை முழுநேர ஊழியராக்க கோரியும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாத ஊதியத்தை தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வு துறையும் வழங்க வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் 200-க்கும் அதிகமான மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.