வளா்ச்சித் திட்டங்கள் அனைவரையும் சென்றடைய நடவடிக்கை: ஆட்சியா்

கிராமங்களின் வளா்ச்சிக்கு தேவையான திட்டங்கள் அனைவரையும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவாரூா் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூா் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
Updated on
1 min read

கிராமங்களின் வளா்ச்சிக்கு தேவையான திட்டங்கள் அனைவரையும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் ஒன்றியம், புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீடித்த நிலையான வளா்ச்சிக்கான இலக்குகள் குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தின் நோக்கம், கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் கிராமத்துக்கு தேவையான வளா்ச்சித் திட்டங்கள் தொடா்பாக விவாதித்து ஒரு தீா்வை எட்டும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதே.

அந்தவகையில், மருத்துவம் சாா்ந்த திட்டங்கள், பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று பயனளிக்கிற வகையில் அமைந்துள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் தங்களது ஊராட்சியின் வளா்ச்சிக்குத் தேவையான கோரிக்கைகளை தெரிவிக்க முழு பொறுப்பு உண்டு என்பதை உணர வேண்டும்.

தற்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால், மூன்றாவது தவணையான முன்னெச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்றாா்.

கிராம சபைக் கூட்டத்தின் கூட்டப் பொருளாக கிராம வளா்ச்சி, சுகாதாரம், தரமான குடிநீா், முறையான நீா் மேலாண்மை, மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துதல், தூய்மையைக் கடைப்பிடித்தல், சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாத்தல் ஊராட்சிகளில் தொழில் வளா்ச்சியை உருவாக்குதல் உள்ளிட்ட 17 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன.

கூட்டத்தில், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோரும் பங்கேற்றனா். முன்னதாக, கிராம ஊராட்சிப் பகுதிகளில் நிலைத்த வளா்ச்சி குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மகளிா் திட்டத்தின் திட்ட அலுவலா் ஸ்ரீலேகா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, துணை இயக்குநா் (சுகாதாரம்) ஹேமசந்த் காந்தி, திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com