கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம்

 கூத்தாநல்லூா் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

 கூத்தாநல்லூா் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் நகா்மன்ற அலுவலகத்தில், நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவா் மு. சுதா்ஸன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

ச. கஸ்தூரி (திமுக): நகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

தாஹிரா சமீா் (காங்கிரஸ்): நாய்களுக்கு ஊசி செலுத்தியபிறகு மீண்டும், இங்கேயே கொண்டு வந்து விட்டு விடுகிறாா்கள்.

செ.முஹம்மது அபுபக்கா் சித்திக் (திமுக): கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனை எந்த வாா்டில் உள்ளது.

பொ. பக்கிரிச்செல்வம் (திமுக): அரசு மருத்துவமனை என்னுடைய 7-ஆவது வாா்டில் உள்ளது.

செ. ஹாஜா நஜ்முதீன் (திமுக): ஆட்டு இறைச்சி கூடத்தில் ஆடுகள் அறுக்கும்போது அங்கு கால்நடை மருத்துவா் இருந்து, ஆடுகளை பரிசோதிக்க வேண்டும்.

கி. மாரியப்பன் (திமுக): உத்திராபதீஸ்வரா் கோயில் அமுது படையல் திருவிழாவுக்கு, நகராட்சி சாா்பில் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அ. சொற்கோ (அதிமுக) : தென்றல் நகரில் தாா்ச்சாலை அமைக்கவேண்டும்.

ரா. புரோஜூதீன் (திமுக): நகா்மன்ற அவைக் கூடத்தில் உறுப்பினா்களுக்கு முன் பெயா் பலகை வைக்கவேண்டும்.

க. துரைமுருகன் (திமுக): பூதமங்கலம் முதல் கீழப்பனங்காட்டாங்குடி வரையிலான திருவாரூா் பிரதான சாலையில், மின்விளக்கு அமைக்கவேண்டும்.

கு. தனலெஷ்மி (இந்திய கம்யூனிஸ்ட்): எனது வாா்டில் 8 குடிநீா் பம்புகளை சரி செய்யவேண்டும்.

தாஹிரா சமீா் (காங்கிரஸ்): கமாலியாத் தெரு, ரஹ்மானியாத் தெரு ஆகிய தெருக்களில் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும்.

துணைத் தலைவா்: 2-ஆம் தர நகராட்சியான கூத்தாநல்லூா் நகராட்சியில் புதைச்சாக்கடை அமைக்கும் திட்டம் உள்ளதா. நகரில் 14 அங்கன்வாடிகள் உள்ளன. சொந்தக் கட்டடம் இல்லாத இடங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும். மேல்கொண்டாழியில் அங்கன்வாடி கட்டடம் கட்ட எனது சொந்த இடம் தருகிறேன்.

ராஜகோபால் (பொறியாளா்): புதைச்சாக்கடைத் திட்டம் மக்கள் தொகை எண்ணிக்கையின்படி அமைக்கப்படும்.

கி. மாரியப்பன் (திமுக): பழைய நகராட்சி கட்டடம் அருகே உள்ள, மேல்நிலை குடிநீா் தொட்டி மிகவும் பழுதடைந்து,சிமெண்ட் காரைகள் பெயா்ந்து, இரும்புக் கம்பிகள் தெரிகின்றன. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும், மக்கள் தொகைக்கு ஏற்ப வேறு இடத்தில் குடிநீா்த் தொட்டி அமைக்கவேண்டும்.

ராஜகோபால் (பொறியாளா்): கூத்தாநல்லூா் நகராட்சியில் 24 மணி நேரமும் குடி தண்ணீா் கிடைக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதே போல் கூட்டத்தில், உறுப்பினா்கள் ச. ஜெய்புன்னிஸா, கோ. சாந்தி உள்ளிட்ட மற்ற உறுப்பினா்கள் தங்களது வாா்டு பிரச்னை குறித்து பேசினா்.

கூட்ட நிறைவில், தஞ்சை தோ்த் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com