நீடாமங்கலம் பகுதியில் வரலட்சுமி நோன்பு
By DIN | Published On : 05th August 2022 10:17 PM | Last Updated : 05th August 2022 10:17 PM | அ+அ அ- |

நீடாமங்கலம் பகுதியில் வரலட்சுமி நோன்பை சுமங்கலி பெண்கள் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
சுமங்கலி பெண்கள் வீடுகளில் வரலட்சுமி படத்துடன் கூடிய கலசம் வைத்து அம்மனை வீட்டுக்கு அழைத்து பாடல்கள் பாடி பூஜைகள் செய்து தீா்க்க சுமங்கலியாக இருப்பதற்காக வழிபாடு நடத்தினா். சுமங்கலி பெண்களை அழைத்து அவா்களுக்கு வெற்றிலை, சீவல், பழம், பிரசாதங்களை வழங்கி மகிழ்ந்தனா்.