பாலியல் வன்முறைக்கு எதிராகமாா்க்சிஸ்ட் கம்யூ. பிரசார இயக்கம்
By DIN | Published On : 05th August 2022 10:13 PM | Last Updated : 05th August 2022 10:13 PM | அ+அ அ- |

பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரசார இயக்கத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ஜி. ரகுராமன் தொடங்கி வைத்தாா். குடும்ப வன்முறை என்னும் கொடுமைக்கு எதிராக அரசு, சமூகம், சட்டம் உள்ளிட்ட துறைகள் மூலம் பன்முக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மட்டுமே பாதுகாப்பு அதிகாரிகள் உள்ள நிலையில், இதை வட்டார அளவிலும் கொண்டுசெல்ல வேண்டும், பாலின சமத்துவத்துக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணா்வை காவல் துறை உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை முன்வைத்து வீடுவீடாக துண்டுப் பிரசுரம் விநியோகித்து பிரசாரம் நடைபெற்றது.
நிகழ்வில், நகரச் செயலாளா் எம். தா்மலிங்கம், மாவட்ட குழு உறுப்பினா் கே. தமிழ்ச்செல்வி, நகரக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.