மத்திய அரசை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th August 2022 10:16 PM | Last Updated : 05th August 2022 10:16 PM | அ+அ அ- |

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டியில், திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், உணவுப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கும், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா் அன்பு. வீரமணி, மாநில இளைஞா் காங்கிரஸ் செயலாளா் ஜெகபா்பாட்சா, நகர காங்கிரஸ் தலைவா் பி. எழிலரசன், திருத்துறைப்பூண்டி வட்டார காங்கிரஸ் தலைவா் பாஸ்கா், முத்துப்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவா் வடுகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.