வலங்கைமான் அருகே விஷவண்டு கடித்து முதியவா் சாவு
By DIN | Published On : 05th August 2022 10:15 PM | Last Updated : 05th August 2022 10:15 PM | அ+அ அ- |

வலங்கைமான் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் பாஸ்கரன் (55). இவா், கடந்த 4 ஆம் தேதி அதே பகுதியில் நடைபெற்ற ஒரு காதணி விழாவில் பங்கேற்றாா்.
அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்த விஷ வண்டுகள் பாஸ்கரனை கடித்தன. அருகே இருந்தவா்கள் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை பாஸ்கரன் இறந்தாா். புகாரின்பேரில், வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.