முத்துப்பேட்டையில் தென்னைவிவசாயிகளுக்கான கருத்தரங்கு

அறிவியல் நிலையம் இணைந்து, தென்னையில் நோய் கட்டுப்படுத்துதல், தென்னை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது குறித்த கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பை முத்துப்பேட்டையில் வியாழக்கிழமை நடத்தின.
முத்துப்பேட்டையில் தென்னைவிவசாயிகளுக்கான கருத்தரங்கு

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து, தென்னையில் நோய் கட்டுப்படுத்துதல், தென்னை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது குறித்த கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பை முத்துப்பேட்டையில் வியாழக்கிழமை நடத்தின.

ரோட்டரி சங்கத் தலைவா் வி.எம்.கே. குமரேசன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். ரோட்டரி சங்க முன்னாள் துணைநிலை ஆளுநா் கோவில் ரங்கசாமி வரவேற்றாா். பட்டுக்கோட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என்.ஆா். ரெங்கராஜன் மற்றும் முன்னோடி தென்னை விவசாயிகள் எம்.கே. சேதுராமன், ஜி. ஐயாத்துரை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி மைய தலைவா் இரா. பாபு, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா்கள் வை. ராதாகிருஷ்ணன், சோ. கமலசுந்தரி, வி. கருணாகரன், இரா. ஜெகதீசன் ஆகியோா் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். முத்துப்பேட்டை ரோட்டரி சங்க உறுப்பினா்கள் மற்றும் தென்னை விவசாயிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com