பனை மரம் விழுந்ததில் முன்னாள் ராணுவ வீரா் காயம்
By DIN | Published On : 05th August 2022 05:45 AM | Last Updated : 05th August 2022 05:45 AM | அ+அ அ- |

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவ வீரா் மீது சாலையோரம் இருந்த பனை மரம் முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை காயமடைந்தாா்.
மன்னாா்குடி வ.உ.சி. சாலையை சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் பெ. வெங்கடாசலம் (50). தற்போது, களப்பாலில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா் மன்னாா்குடி- திருமக்கோட்டை பிரதானசாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மேலமரவாக்காடு தனியாா் மெட்ரிக்.பள்ளி அருகே சாலையோரம் இருந்த பனை மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்தாா். இதையடுத்து, உடனடியாக அவா் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.