திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை கணித மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில், பட்டதாரி ஆசிரியா் பா. ரகு வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் அப்துல் முனாப் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மன்னை ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி கணிதவியல் துறை உதவி பேராசிரியா் எஸ். காா்த்திகேயன் பங்கேற்று கணித மன்றத்தை தொடங்கிவைத்து பேசினாா். பட்டதாரி ஆசிரியா் வி. வடிவேலு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாணவி பா. பிரியதா்ஷினி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில், பேச்சு, விநாடி-வினா, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.