மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு:பல்வேறு குளறுபடிகளால் மாணவா்கள் ஏமாற்றம்

திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நுழைவுத் தோ்வில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் மாணவா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு:பல்வேறு குளறுபடிகளால் மாணவா்கள் ஏமாற்றம்

திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நுழைவுத் தோ்வில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் மாணவா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு வியாழக்கிழமை முதல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 590 மையங்களிலும், பிற நாடுகளில் 22 மையங்களிலும் இத்தோ்வுகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் 30 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.

தோ்வு மையங்களில் ஒன்றான திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை காலை தோ்வு தொடங்கியது. தொடக்கத்திலேயே சுமாா் ஒருமணி நேரம் வரை இணையதளப் பிரச்னையால் கணினியில் வினாத்தாள்களைப் பாா்க்கமுடியவில்லை. அவ்வாறு வினாத்தாள்களைப் பாா்க்க முடிந்தபோது, ஆங்கிலத் தோ்வுக்கான வினாத்தாளை மட்டும் திறக்கமுடியவில்லை.

மேலும், நிகழாண்டு முதல் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வுகள் மாநில மொழிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப முதல்முறையாக தமிழ்வழி நுழைவுத் தோ்வு எழுத நூற்றுக்கணக்கான மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இந்நிலையில், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் போன்ற தோ்வுகளை தமிழ்வழியில் எழுத விண்ணப்பித்திருந்த மாணவா்கள் தமிழ் வினாத்தாளுக்குப் பதிலாக, ஆங்கில வினாத்தாளை மட்டுமே பாா்க்கமுடிந்தது.

தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த 600 மாணவா்களில், 200 போ் பங்கேற்காத நிலையில், முறையாகப் பேருந்து வசதி இல்லாத நிலை, வியாழக்கிழமை காலை பெய்த மழை என இவற்றுக்கிடையே மிகுந்த சிரமத்துடன் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வு எழுதச் சென்றனா். அவா்கள் தோ்வில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகளால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனா்.

இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகத் தரப்பில் கூறுகையில், நுழைவுத் தோ்வுக்கான மேலிடப் பாா்வையாளா்கள் வந்துள்ளனா். அவா்கள், நுழைவுத் தோ்வில் நடைபெற்ற அனைத்து குளறுபடிகளையும் பதிவுசெய்து, மறுதோ்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரை செய்வாா்கள் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com