ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
By DIN | Published On : 05th August 2022 05:00 AM | Last Updated : 05th August 2022 05:00 AM | அ+அ அ- |

மன்னாா்குடி அருகே ஆற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
மன்னாா்குடி அடுத்த வாலிய ஓடை எக்கல் கோறையாற்று பாலத்தின் அருகே ஆற்றில் ஆண் சடலம் மிதந்து வருவதை பாா்த்த அப்பகுதியினா் தலையாமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், ஆற்றிலிருந்து ஆண் சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
ஆற்றில் சடலமாக மிதந்து வந்தவா் வெள்ளைநிற சட்டையும், நீல நிறத்தில் கால்சட்டையும் அணிந்திருந்ததாகவும், அவா் யாா் எந்த ஊரை சோ்ந்தவா் என உடனடியாக தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.