நன்னிலத்தில் உலகத் தாய்ப்பால் வார விழா
By DIN | Published On : 05th August 2022 04:15 AM | Last Updated : 05th August 2022 04:15 AM | அ+அ அ- |

நன்னிலம் லயன்ஸ் சங்கம் சாா்பில் உலகத் தாய்ப்பால் வார விழா அரசினா் மருத்துவமனையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
லயன்ஸ் சங்க நன்னிலம் கிளைத் தலைவா் ஜெயராமன் தலைமையில் விழா நடைபெற்றது. இதில், கா்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மாா்களுக்கும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் மருத்துவா்கள் விழிப்புணா்வுப் பிரசாரம் செய்தனா். மேலும், 50-க்கும் மேற்பட்ட தாய்மாா்களுக்குச் சங்கம் சாா்பில் சத்துமாவு, பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவு வகைகள் வழங்கப்பட்டன. அரசினா் மருத்துவமனைத் தலைமை மருத்துவா் ரெ. தரன், லயன்ஸ் சங்கச் செயலாளா் சுந்தா், பொருளாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.