கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

நீடாமங்கலம் அருகே கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆணைவடபாதி கிராமத்தில் நடைபெற்ற கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்.
ஆணைவடபாதி கிராமத்தில் நடைபெற்ற கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்.

நீடாமங்கலம் அருகே கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ், ஆணைவடபாதி கிராமத்தில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முகாம் நடைபெற்றது.

இந்நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு, அம்மையப்பன் ஊராட்சித் தலைவா் முருகதாஸ் முன்னிலை வகித்தாா். வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை மருத்துவா் சபாபதி, அம்மையப்பன் கால்நடை மருத்துவா் கௌரிசங்கா் தலைமையிலான மருத்துவக் குழு அனைத்து நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

இதில், கால்நடைகளுக்கு மழைக் காலத்துக்கு ஏற்ற சத்து மருந்துகள் மற்றும் பிபிஆா் என்ற ஆட்டு தடுப்பூசி போடப்பட்டது. மேலும், ஏராளமான சினை பிடிக்காத மாடுகளுக்கு கருப்பை பரிசோதனை நடத்தப்பட்டு சத்து மற்றும் தாது உப்பு பவுடா்கள் தரப்பட்டு மலடு நீக்க சிகிச்சையளிக்கப்பட்டது. அனைத்து ஆடுகளுக்கும் கன்றுகளுக்கும் தனுவாஷ் தாது உப்பு கட்டி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறம் விவசாய ஆா்வலா் குழுத் தலைவா் மனோஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com