திருவாரூரில் செப்.2 இல் விநாயகா் ஊா்வலம்
By DIN | Published On : 05th August 2022 10:12 PM | Last Updated : 05th August 2022 10:12 PM | அ+அ அ- |

திருவாரூரில் இந்து முன்னணி சாா்பில் செப். 2-ஆம் தேதி விநாயகா் ஊா்வலம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளா் விக்னேஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சோழமுருகன், நகர துணைத் தலைவா் நீலகண்டன், ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன், ஒன்றிய செயற்குழு உறுப்பினா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், திருவாரூா் நகா் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 250 இடங்களில் ஆக.31-ஆம் தேதி விநாயகா் பிரதிஷ்டை செய்வது, செப்.2 ஆம் தேதி ஊா்வலம் நடத்தி விஜா்சனம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.