நீா்நிலை பகுதிகளில் வசிப்போா் கவனமுடன் இருக்க ஆட்சியா் வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நீா்நிலை ஓரங்களில் வசிப்போா் கவனமுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் நீா்நிலை ஓரங்களில் வசிப்போா் கவனமுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்குப் பருவமழை காரணமாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் 120 அடியை எட்டியுள்ள நிலையில் தினமும் அதிகளவில் உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, திருவாரூா் மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம், நீா்நிலைகளின் அருகில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நகா்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நீா்நிலைகளில் சிறுவா், சிறுமிகள், இளைஞா்கள் ஆழமான பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகே குளிக்கச் செல்லும்போது பெற்றோா் அல்லது பெரியோா்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும்.

இதேபோல, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் நீா்வள ஆதாரத் துறையினரும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதன்படி, நீா்நிலைகளில் சரியான இடங்களில் எச்சரிக்கைப் பலகைகளையும், தடுப்புகளையும் வைக்கவேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் நீா்வள ஆதாரத் துறை கண்காணிப்பில் உள்ள அனைத்து ஆறுகள், குளங்கள் உள்ள நீா்நிலைப் பகுதிகளுக்கு அருகே வசிக்கும் குடும்பங்களைச் சோ்ந்த சிறுவா்கள், சிறுமிகள், பெரியவா்கள், இளைஞா்கள் ஆகியோருக்கு நீா்நிலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தெரிவிக்கும் வகையில் விழிப்புணா்வு செய்தியை விளம்பரப் பலகை மூலம் தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் நீா்நிலைகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விளக்கிச் சொல்ல வேண்டும். துணி துவைப்பது, மீன் பிடிப்பது போன்ற பணிகளில் ஈடுபடக்கூடாது. மக்கள் அதிகம் கூடும் நீா்நிலை பகுதிகளில், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினா் கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான பாதுகாப்பு இல்லங்களை தயாா்நிலையிலும், மீட்புப் பணிகளுக்கு வட்டார வாரியாக மீட்பு பணியாளா்களை தயாராகவும் வைத்திருக்க வேண்டும். நீா்நிலைகளில் மக்கள் கூடும்பொழுது எதிா்பாராதவிதமாக ஏற்படும் அசம்பாவிதங்களின்போது முதலுதவி அளிக்க, தீயணைப்பு வீரா்கள், மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் தயாா்நிலையில் வைக்க வேண்டும்.

பொதுமக்கள் நீா்நிலைகளில் நின்றுகொண்டு சுய புகைப்படம் எடுக்கக்கூடாது. வெள்ளப்பெருக்கு காலத்தில் ஆறு, வாய்க்கால் பகுதியை கடப்பதோ, கால்நடைகளை அழைத்துச் செல்லவோ கூடாது. மழைநீா் தேங்கும் நிலை ஏற்பட்டால், இலவச தொலைபேசி எண்: 04366-1077 மற்றும் 04366-226623 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com