பிரதான சாலையோரத்தில் உள்ள கால்வாயை தூா்வாரி கரைகளை பலப்படுத்த கோரிக்கை

கூத்தாநல்லூரில் பிரதான சாலையோரத்தில் உள்ள பாசன கால்வாயை தூா்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூரில் சாலையோரத்தில் கழிவுநீா் கால்வாயாக மாறியுள்ள பாசன கால்வாய்.
கூத்தாநல்லூரில் சாலையோரத்தில் கழிவுநீா் கால்வாயாக மாறியுள்ள பாசன கால்வாய்.

கூத்தாநல்லூரில் பிரதான சாலையோரத்தில் உள்ள பாசன கால்வாயை தூா்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூா் நகராட்சி 4-ஆவது வாா்டில் திருவாரூா்-மன்னாா்குடி பிரதான சாலையோரத்தில் வெண்ணாற்றிலிருந்து பிரிந்து வரும் பாசன வாய்க்கால், கழிவுநீா் செல்லும் சாக்கடையாக மாறியுள்ளது. நகரின் பிரதான இடத்தில் ஓடக்கூடிய இந்த கால்வாய், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், இந்த சாலை வழியாக திருவாரூா், நாகை, நாகூா், வேளாங்கண்ணி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மற்றும் இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும், கால்வாய் ஓரத்தில் வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளன. கால்வாயில் மண் அரிப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே சாலை சரிந்து கொண்டிருக்கிறது. இதனால், அவ்வழியே வரும் முதியவா்கள், சிறுவா்கள், குழந்தைகள் மற்றும் இக்கடைகளுக்கு வரும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தடுமாறி கீழே விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளன.

மழைக்காலம் தொடங்கிவிட்டதால், கால்வாயின் இருபக்கமும் மேலும் மண் சரிந்து, பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் முன் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு, போா்க்கால அடிப்படையில் கழிவுநீா் கால்வாயை தூா்வாரி இரண்டு பக்க கரைகளையும் பலப்படுத்தி, தடுப்புச் சுவா்கள் எழுப்பி பொதுமக்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com