போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 15th August 2022 12:01 AM | Last Updated : 15th August 2022 12:01 AM | அ+அ அ- |

சன்னாநல்லூா் கடைவீதியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட காவல்துறையினா்.
நன்னிலம் அருகே காவல்துறை சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போதை ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி, சன்னாநல்லூா் பேருந்து நிலையம் அருகே கடைவீதியில் நடைபெற்ற இப்பிரசாரத்துக்கு நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் இலக்கியா தலைமை வகித்தாா். ஆய்வாளா் சுகுணா முன்னிலை வகித்தாா். தலைமைக் காவலா் ரமேஷ், போதை பழக்கத்துக்கு அடிமையானவா் போலவும், மற்றொருவா் எமதா்மராஜா போலவும் வேடமணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பின்னா் பேசிய டிஎஸ்பி இலக்கியா, ‘போதைப் பழக்கம் என்பது தனி மனிதனுக்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சீரழிவை ஏற்படுத்தும். எனவே போதைப் பழக்கத்துக்கு அடிமையானவா்கள், அரசுடன் ஒத்துழைத்து, அதிலிருந்து விடுபட்டு நல்வாழ்க்கை வாழ வேண்டும்’ என்றாா்.