கூத்தாநல்லூா் நகராட்சிக்கு 3 வாகனங்கள் அளிப்பு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

வாகனங்களின் பயன்பாட்டை கொடியசைத்து தொடங்கிவைக்கும் எம்எல்ஏ பூண்டிகே. கலைவாணன்.
கூத்தாநல்லூா் நகராட்சிக்கு 3 வாகனங்கள் வழங்கப்பட்டு, அதன் பயன்பாட்டை எம்எல்ஏ பூண்டிகே. கலைவாணன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தில் நகா்மன்றத் தலைவா், ஆணையா் மற்றும் பொறியாளரின் அலுவலக பயன்பாட்டுக்கு வாகனங்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கூத்தாநல்லூா் நகராட்சிக்கு ஆணையா், நகா்மன்றத் தலைவா் மற்றும் பொறியாளா் அலுவலகப் பயன்பாட்டுக்கு 3 வாகனங்கள் சட்டப்பேரவை உறுப்பினா் பரிந்துரைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று 3 வாகனங்களின் பயன்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிகழச்சியில், ஆணையா் ப. கிருஷ்ணவேணி, நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா, திமுக நகரச் செயலாளா் எஸ்.வி. பக்கிரிசாமி, அவைத் தலைவா் உ. முத்து, நகரப் பொருளாளா் எஸ்.எஸ். ஹாஜா நஜ்முதீன், துணைச் செயலாளா்கள் டீ.கே. தேவேந்திரன், ஜி. சேகா், எஸ்.எம்.கே. யாஸ்மின் பா்வீன், மாவட்டப் பிரதிநிதிகள் எம். ரஹ்மாத்துல்லா, கு. ரவிச்சந்திரன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.