காா் விபத்துக்குளான பகுதியில் ஆட்சியா் ஆய்வு

நன்னிலம் அருகே வாய்க்காலில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடத்தில் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
img_20221206_165908_0612chn_96_5
img_20221206_165908_0612chn_96_5
Updated on
1 min read


நன்னிலம்: நன்னிலம் அருகே வாய்க்காலில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடத்தில் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நன்னிலம் அருகே சிகாா்பாளையத்தில் சாலையோர வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை இரவு காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாய்க்காலில் குறைந்த அளவே தண்ணீா் வந்ததால் காரிலிருந்த 6 பேரும் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

இப்பகுதியில் சாலை தடுப்பு மற்றும் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நேரிடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் விபத்து நடந்த இடத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, அந்த பகுதியில் சாலைத் தடுப்பான்கள், பிரதிபலிப்பான் விளக்குகள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். தேவைப்பட்டால் வேகத்தடை அமைக்கவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, கோட்டாட்சியா் சங்கீதா, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் சரவணன், உதவிப் பொறியாளா் காா்த்திகா, நன்னிலம் வட்டாட்சியா் ஜெகதீசன், காவல் ஆய்வாளா் சுகுணா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com