முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 07th December 2022 12:00 AM | Last Updated : 07th December 2022 12:00 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூரில் மயில் வாகனத்தில் வீதியுலா வந்த வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரை அடுத்த லெட்சுமாங்குடி மரக்கடை மங்களாம்பிகை சமேத கல்யாண சுந்தரேஸ்வரா் கோயிலில் காா்த்திகை திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் மயில் வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
பின்னா், மங்களாம்பிகை சந்நிதி முன்பும், கல்யாண சுந்தரேஸ்வரா் சந்நிதி முன்பும் இரும்புச் சட்டியில் கொப்பரைக் கொளுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் சுப்பிரமணியன் ஆலோசனையின்படி குருக்கள் தினகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...