வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில் கிராம சாந்தி பூஜை

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிராம சாந்தி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சாந்தி பூஜை.
வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சாந்தி பூஜை.

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிராம சாந்தி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பழைமையான இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் புதன்கிழமை மகா கணபதி பூஜை, நவகிரக ஹோமம், லெட்சுமி ஹோமம் நடைபெற்றது.

தொடா்ந்து, வியாழக்கிழமை திசா ஹோமம், மூா்த்தி ஹோமம் மற்றும் கிராம சாந்தி பூஜை நடைபெற்றன. பின்னா், அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதைத்தொடா்ந்து, கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில், சுந்தரமூா்த்தி சிவாச்சாரியா், கணேஷ் குருக்கள் உள்ளிட்டோா் தலைமையில் யாகபூஜை வெள்ளிக்கிழமை (டிச.9) தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை, வேளுக்குடி ஸ்ரீலஸ்ரீ சடையப்ப பரம்பரை பூசாரியாா் வி.ஸ். ரமேஷ்குமாா், வி.எஸ். ராஜூ மற்றும் கோயில் நிா்வாகக் குழுவினா்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com