குளுந்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 11th December 2022 10:36 PM | Last Updated : 11th December 2022 10:36 PM | அ+அ அ- |

தப்ளாம்புலியூா் குளுந்தாளம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
தப்ளாம்புலியூா் அருள்மிகு குளுந்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தப்ளாம்புலியூா் ஊராட்சி இலங்கைசேரியில் அருள்மிகு ஸ்ரீ சின்மய பிடாரி குளுந்தாளம்மன் கோயில் உள்ளது. கோயில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையொட்டி கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின.
இரண்டாம் கால யாக சாலை பூஜைகள்ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவடைந்து, மஹா பூா்ணாஹூதி நடைபெற்றது. பின்னா் விமானக் கலசங்களுக்கு புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.