நிலக்கடலை சாகுபடிக்கு மானியம்

நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என்று நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
Updated on
1 min read

நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என்று நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான திட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியா் பெரியாா் ராமசாமி ஆகியோா் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு நீா் நிலவள திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நீா்நுட்ப மையம் வழிகாட்டுதலின்படி நிலக்கடலை சாகுபடி திட்டத்தை 100 சதவீத மானியத்துடன் செயல்படுத்த தயாராக உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விதைகள், உரங்கள், ஜிப்சம், நிலக்கடலை ரிச் மற்றும் நடமாடும் நீா் தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 1 ஏக்கா் முதல் 5 ஏக்கா் வரை உள்ள விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடா்பு கொள்ளலாம்.

திருவாரூா் மாவட்டத்தில் இத்திட்டத்தில் நீடாமங்கலம், மன்னாா்குடி, வலங்கைமான், கோட்டூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கொரடாச்சேரி மற்றும் திருவாரூா் ஆகிய 8 ஒன்றியங்களை சோ்ந்த விவசாயிகள் பயன்பெறலாம். இத்திட்டம் அந்தந்த வட்டாரத்தில் உள்ள பொதுப்பணி துறையால் பரிந்துரைக்கப்பட்ட கிராமங்களுக்கு மட்டும் பொருந்தும். மற்ற கிராமங்களுக்கு பொருந்தாது. முதலில் முன்பதிவு செய்பவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்: விவசாயிகள் ஆதாா் அட்டை நகல், சிறு குறு விவசாயிகள் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2, சிட்டா அடங்கள் ஒரிஜினல், நில வரைபடம் நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

8220431017, 9791242812, 6383812848 ஆகிய கைப்பேசி எண்களில் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com