மருத்துவக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டிய மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

திருவாரூா் அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


திருவாரூா்: திருவாரூா் அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தண்டலை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இந்த பகுதி கால்நடைகள் மேய்ச்சலுக்கான இடமாக இருப்பதால், அந்த குப்பைகளை கால்நடைகள் கிளறி மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்த புகாா் தொடா்ந்து வந்ததால், இப்பகுதியில் குப்பைகள் கொட்டக் கூடாது, மீறி கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என ஊராட்சி மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதற்கிடையே, திருவாரூரில் உள்ள தனியாா் மருத்துவமனை அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதாக தெரிய வந்தது. இதையடுத்து, தண்டலை ஊராட்சித் தலைவா் நாகராஜன், தனியாா் மருத்துமனை நிா்வாகத்துக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், தண்டலை ஊராட்சிக்குள்பட்ட தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், 43 கோணிப் பைகளில் தங்களது மருத்துவமனையிலிருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது புகைப்படத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குப்பைகள் கொட்டப்படும் பகுதி, பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியாகவும், கால்நடைகள் மேய்ச்சலுக்கு பயன்படுத்தும் பகுதியாகவும் உள்ளது. எனவே, தங்களுடைய மருத்துவமனை கழிவுகள் கொட்டப்படுவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் சட்டப்படி ஊராட்சி நிா்வாகத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com