வேட்பாளா்களுக்கு தோ்தல் விதிமுறைகள் குறித்து விளக்கம்
By DIN | Published On : 08th February 2022 11:39 PM | Last Updated : 08th February 2022 11:39 PM | அ+அ அ- |

election_meeting_0802chn_101_5
மன்னாா்குடி நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளா்களுக்கு தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, மன்னாா்குடி நகராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் கே. சென்னுகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், மன்னாா்குடி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு, தோ்தல் நடத்தை விதிகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
மேலும், தோ்தல் விதிமுறைகள் அடங்கி கையேடு, வேட்பாளா் அடையாள அட்டைக்கான படிவம், வேட்பாளா்களின் முகவா்களுக்கான படிவம் ஆகியவை வழங்கப்பட்டன. இதில், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் விஜயகுமாா், மேலாளா் ஜெ. மீராமன்சூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Image Caption
கூட்டத்தில் பேசும் மன்னாா்குடி நகராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் கே.சென்னுகிருஷ்ணன்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...