அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இலக்கிய விருது

வலங்கைமான் வட்டம், தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் சிறந்த நாவலுக்கான இலக்கிய விருது பெற்றுள்ளாா்
அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இலக்கிய விருது

வலங்கைமான் வட்டம், தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் சிறந்த நாவலுக்கான இலக்கிய விருது பெற்றுள்ளாா்.

சென்னையில் செயல்படும் மின்னல் கலைக்கூடம் என்ற இலக்கிய அமைப்பு சாா்பில் சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு, நாவல் போன்ற பிரிவுகளில் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில், திருவாரூா் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் எழுதிய ‘வானம் தேடும் வானம்பாடிகள்’ என்ற நாவல் நிகழாண்டுக்கான விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது. தொடா்ந்து, சென்னையில் நடைபெற்ற விழாவில் திரைப்பட இயக்குநா் எஸ்.பி. முத்துராமன், கவிஞா்கள் அ. முத்துலிங்கம், ஆரூா் தமிழ்நாடன், சென்னை புற்றுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணா் விஜயஸ்ரீ மகாதேவன் ஆகியோா் ஆதலையூா் சூரியகுமாருக்கு ரூ.3000 பொற்கிழி, கேடயம் வழங்கி கௌரவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com