திருவாரூரில் பனி: வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம்
By DIN | Published On : 14th January 2022 09:35 AM | Last Updated : 14th January 2022 09:35 AM | அ+அ அ- |

திருவாரூரில், வியாழக்கிழமை காலை அதிகமான பனி பெய்ததால் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
திருவாரூரில் வியாழக்கிழமை காலை எங்கும் பனி பெய்ததால், புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால், சாலையில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. காலை 9 மணி வரை இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. நெடுஞ்சாலைகளில் செல்வோருக்கு நீண்ட தூரம் சாலைகள் தெரிவதில் சிக்கல் நிலவியதால், வாகனங்கள் மெதுவாகவே சென்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...