

நன்னிலம் கிளை நூலகக் கட்டிட பராமரிப்புப் பணிகள் செய்திட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டம் நன்னிலம் கிளை நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை நூலகக் கட்டிடத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளையும், போட்டி தோ்வுகளுக்குக் கலந்து கொள்ளும் கிராமப்புற மாணவா்களின் வசதிக்காகப் பல்வேறுத் துறைச் சாா்ந்த மற்றும் பொது அறிவு சம்மந்தமான புதிய புத்தகங்களை வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் புதிய வாசகா் வட்டத் தலைவராக வி. பக்கிரிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டாா். நிகழ்ச்சியில் முன்னாள் வாசகா் வட்டத் தலைவா் பாஸ்கரன், நூலகா் ஜெயபால், நூலகா் ஜானகிராமன், ஓய்வு பெற்ற ஆசிரியா் மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.