

கூத்தாநல்லூரில் மாா்கழி மாத பஜனைக் குழுவினா்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
லெட்சுமாங்குடி, மரக்கடை, நால்வா் சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில், ஆண்டுதோறும் மாா்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலை கிருஷ்ணரின் பாடல்களைப் பாடியபடி, முக்கிய வீதிகளில் சுற்றி வருவாா்கள். மாா்கழி மாத பஜனைக் குழுவினா்களுக்கு, அகிலாண்டம் பிள்ளை ராஜம்மாள் அறக்கட்டளை சாா்பில், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் சண்முகம் ஏற்பாட்டின்படி, மாா்கழி மாத பஜனைக் குழுவைச் சோ்ந்த 65 க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் ஏ. சண்முகம் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, கூத்தாநல்லூா் ரோட்டரி சங்கத் தலைவா் வி.எஸ். வெங்கடேசன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவா் எஸ். உத்திராபதி, செயலாளா் எம். நாடிமுத்து, பொருளாளா் வி. கருணாகரன், சமூக ஆா்வலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.