திண்டுக்கல்லுக்கு ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு
By DIN | Published On : 26th January 2022 09:45 AM | Last Updated : 26th January 2022 09:45 AM | அ+அ அ- |

நீடாமங்கலத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் ரயிலில் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் தெற்கு நத்தம், இடையா் நத்தம், அசேஷம், மூவாநல்லூா், ராஜகோபாலபுரம் ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஆயிரம் டன் சன்னரக நெல், 79 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக திண்டுக்கல்லுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...