மன்னாா்குடி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெருகவாழ்ந்தான் கடைவீதியில் முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனா்.
விசாரணையில், அவா் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வாட்டாக்குடி வடக்குத் தெருவை சோ்ந்த பிரபாகரன் மகன் மகேந்திரன்(42) என்பதும், கைப்பேசி வாட்ஸ் அப் குழு மூலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், ரூ.31,740 பணம் மற்றும் கைப்பேசி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.