இடையர் எம்பேத்தி ஊராட்சி தலைவர் தற்செயல் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி

இடையர் எம்பேத்தி ஊராட்சி தலைவர் தற்செயல் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இடையர் எம்பேத்தி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் நா.மனோஜுக்கு சான்றிதழ் வழங்குகிறார் தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சிவக்குமார்.
இடையர் எம்பேத்தி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் நா.மனோஜுக்கு சான்றிதழ் வழங்குகிறார் தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சிவக்குமார்.

திருவாரூர்: இடையர் எம்பேத்தி ஊராட்சி தலைவர் தற்செயல் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட இடையர் எம்பேத்தி ஊராட்சி தலைவருக்கான தற்செயல் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட நா.மனோஜ், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 116 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில் காலியாக உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தற்செயல் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.


இதில், இடையர் எம்பேத்தி ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் நா.மனோஜ் பூட்டு சாவி சின்னத்திலும், அதிமுக சார்பில் ஆர்.இளையராஜா ஆட்டோ ரிக்க்ஷா சின்னத்தில் என இருமுனைப் போட்டியாக இருந்ததது.

இதே போன்று, மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் வடகோவனூர் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவின் போது, இடையர் எம்பேத்தியில் மொத்த வாக்குகள் 891 பதிவானது. 

வடகோவனூரில் 2-வது வது வார்டில் மொத்த வாக்கு 151 பதிவானது. வாக்கு எண்ணிக்கையானது செவ்வாய்க்கிழமை மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், திமுக வேட்பாளர் நா.மனோஜ் 421 வாக்குகளும், ஆர்.இளையராஜா 305 வாக்குகளும் பெற்று இருந்தனர். செல்லாத வாக்குகள் 13.  திமுக வேட்பாளர் மனோஜ் 116 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். வடகோவனுரில் 2-வது வார்டில் கா.தனபால் 64 வாக்குகள் பெற்றி வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான எஸ்.சிவக்குமார் சான்றிதழ் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com