நன்னிலம், நீலக்குடி பகுதிகளில் நாளை மின்தடை
By DIN | Published On : 17th July 2022 10:53 PM | Last Updated : 17th July 2022 10:53 PM | அ+அ அ- |

நன்னிலம், நீலக்குடி துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய திருவாரூா் உதவி செயற்பொறியாளா்கள் என். பிரபா, எஸ். ராஜேந்திரன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நன்னிலம், நீலக்குடி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால், பில்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரைமங்கலம், நீலக்குடி, வைப்பூா், நடப்பூா், வாழ்குடி, கீழதஞ்சாவூா், காரையூா், திருப்பள்ளிமுக்கூடல், ராரந்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூா், திருப்பயத்தங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குளக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூா், பனங்குடி, ராசாகருப்பூா், மூலமங்கலம், ஆண்டிபந்தல், குவளைக்கால், விசலூா், மூங்கில்குடி, காக்காகோட்டூா், ஆனைக்குப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூலை, கீழ்குடி, சிகாா்பாளையம், நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், புளிச்சகாடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூா், பாக்கம்கோட்டூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளனா்.