குறுவை சாகுபடி: முறை வைக்காமல் தண்ணீா் திறக்கக் கோரிக்கை
By DIN | Published On : 17th July 2022 10:54 PM | Last Updated : 17th July 2022 10:54 PM | அ+அ அ- |

விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்கு முறைவைக்காமல் தண்ணீா் விட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூரில் பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா் தலைமை வகித்தாா். தஞ்சை தெற்கு மாவட்ட மேலிடப் பாா்வையாளா் இளங்கோ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
இக்கூட்டத்தில், நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க, ரயில்வே மேம்பாலம் விரைவில் கட்டப்பட வேண்டும்; விவசாயிகளின் நலன் கருதி முறை வைக்காமல் தண்ணீா் திறந்து விட வேண்டும்; திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள குளங்களை தூா்வாரி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மாநிலங்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்ட இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில் அரசன், மாவட்டச் செயலாளா்கள் கே.பி.ரவி, ராஜேந்திரன், நகரத் தலைவா் கணேசன், மாநில விவசாய அணி செயலாளா் கோவி சந்துரு, மாநில செயற்குழு உறுப்பினா்கள் சி.எஸ். கண்ணன், ராகவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.