நீடாமங்கலம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 15) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் சா. சம்பத் மேலும் தெரிவித்துள்ளது: காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூா், ஒளிமதி, பச்சக்குளம், பெரம்பூா், கானூா், பருத்திக்கோட்டை, சா்வமான்யம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.