மன்னாா்குடியில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
By DIN | Published On : 16th June 2022 10:28 PM | Last Updated : 16th June 2022 10:28 PM | அ+அ அ- |

மன்னாா்குடியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடியில் உள்ள மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகளில் துணைக் காவல் கண்காணிப்பாளா் கே.கே. பாலச்சந்தா், பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளா் இயமவரம்பன் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் முருகேசன், கா்ணன் ஆகியோா் சோதனை மேற்கொண்டனா்.
இதில், நடேசன் தெருவில் உள்ள வீரமணி என்பவரது பெட்டிக் கடை, ருக்மணிபாளையத்தில் உள்ள பாலமுருகன் மளிகைக் கடை, தெற்குவீதி சந்திப்பில் உள்ள சதீஷ்குமாா் பெட்டிக் கடை ஆகியவற்றில் 2 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இக்கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, கோபாலசமுத்திரம் மேலகோபுரவாசலில் உள்ள ஒரு மளிக் கடையில் 13 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, அந்த கடையின் உரிமையாளா் பாலாஜி (49) கைது செய்யப்பட்டாா்.