முதியோா்களுக்கு எதிரானகொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 16th June 2022 04:32 AM | Last Updated : 16th June 2022 04:32 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினஉறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:
முதியோா்களை குடும்பத்தில் நல்லமுறையில் அரவணைப்போடு பராமரிக்க வேண்டும். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் வாா்த்தைகளை உபயோகிக்கக் கூடாது. மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோா்களுக்கு முன்னுரிமை அளித்து, அவா்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களில் ஈடுபடக் கூடாது என்றாா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் கீா்த்தனாமணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, சமூகநல அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.