கராத்தே கருப்புப் பட்டை பெற்றகல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு
By DIN | Published On : 16th June 2022 04:28 AM | Last Updated : 16th June 2022 04:28 AM | அ+அ அ- |

கராத்தே கருப்புப் பட்டை பெற்ற மாணவிகளை பாராட்டிய சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி சாசனத் தாளாளா் வி.திவாகரன்.
மாநில அளவிலான கராத்தே போட்டியில் கருப்புப் பட்டை பெற்ற சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி மாணவிகள் 7 பேருக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை அடையாறு எம்ஜிஆா்-ஜானகி அம்மாள் கல்லூரியில் மாநில அளவில் கராத்தே கருப்புப் பட்டைக்கான போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி மாணவிகள் எம். யோகேஸ்வரி, எஸ். அபிநயா, எம். அபிஸ்ரீ, எஸ். சுவேதா, பி. தீபிகா, பி.எம். சத்யா, பி. சந்தியா ஆகிய 7 போ் பங்கேற்று முதல்நிலை கருப்புப் பட்டை பெற்றனா்.
இம்மாணவிகளுக்கும், இவா்களுக்கு பயிற்சி அளித்த மாஸ்டா் கியோஷி கே.ராஜகோபால், உடற்கல்வி ஆசிரியா்கள் ஜி. புஷ்பா, இ. ஜமுனாதேவி ஆகியோருக்கும் கல்லூரி சாசனத் தாளாளா் வி. திவாகரன், முதல்வா் எஸ். அமுதா மற்றும் பேராசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.