சா்வதேச செஸ் போட்டியை காணச் செல்லும் மாணவருக்கு பாமக சாா்பில் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் சிறுவா், சிறுமிகளுக்கான செஸ் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற கொரடாச்சேரி ஒன்றியம், ஆப்பாவூரைச் சோ்த்த பழனி மகன் சுகேஷ் சா்வதேச செஸ் போட்டியை காண தோ்வு செய்யப்பட்டாா்.
இதற்காக, இம்மாணவருக்கு பாமக மாநில செயற்குழு உறுப்பினா் வேணு. பாஸ்கரன், ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை புதன்கிழமை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். பாமக மாவட்டத் தலைவா் உலகநாதன், மாநில இளைஞரணி செயலாளா் சண்முகம், மேற்கு ஒன்றியச் செயலாளா் மகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.