இந்திய கம்யூ. நகர மாநாடு
By DIN | Published On : 16th June 2022 04:26 AM | Last Updated : 16th June 2022 04:26 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 16-ஆவது நகர மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி மங்கை மகாலில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு, கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் கோ. பழனிச்சாமி தலைமை வகித்தாா். நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, கட்சியின் மாவட்டச் செயலாளா் வை. சிவபுண்ணியம், துணைச் செயலாளா் ஆா். ஞானமோகன், கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் எம். வையாபுரி, முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன், ஒன்றியச் செயலாளா் பாலு, நகரச் செயலாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், 21 போ் கொண்ட நகரக் குழு தோ்வு செய்யப்பட்டது. அதன்படி, நகரச் செயலாளராக டி.பி. சுந்தா், துணைச் செயலாளராக காந்தி, பொருளாளராக தாஜுதீன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.