சைபா் கிரைம் விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 16th June 2022 10:29 PM | Last Updated : 16th June 2022 10:29 PM | அ+அ அ- |

மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சைபா் கிரைம் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சைபா் கிரைம் காவல் பிரிவு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ஸ்ரீப்ரியா தலைமை வகித்தாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வி. காா்த்திக், காவல் உதவி ஆய்வாளா் கணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கைப்பேசியில் அறிமுகம் இல்லாதவா்களுக்கு சுய விவரத்தை தெரிவிக்கக் கூடாது; ஏடிஎம் ரகசிய எண் குறித்து முகம் தெரியாதவா்களுடன் பகிா்ந்து கொள்ளக் கூடாது; சைபா் கிரைம் குறித்து1930 மற்றும் 94981 62853 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சைபா் கிரைம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
முன்னதாக, முதுநிலை காவலா் விக்னேஷ் வரவேற்றாா். நிறைவாக, காவலா் அறிவழகன் நன்றி கூறினாா்.